அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்..! காங்கேயத்தில் தடா ரஹீம் பேட்டி

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை பாரபட்சம் இன்றி திமுக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என திருப்பூரில் இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் பேட்டியளித்துள்ளார்.



திருப்பூர்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கேட்டுகொண்டுள்ளார்.



திருப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் சார்பில் கோரிக்கை பொதுக்கூட்டம் காங்கேயம் சாலையில் உள்ள பெரிய தோட்டம் பகுதியில் திருப்பூர் மாவட்ட தலைவர் அஸ்லாம் பாஷா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் சிறப்புரையாற்றினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அரசு அமைக்கப்பட்டால் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்ததனர். இதனால் தான் இஸ்லாமியர்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை தேர்வு செய்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு பின்னால் திமுக அரசு ஆயில் சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டி வருகிறது.

ஆகவே அண்ணா பிறந்தநாள் அன்று ஆயுள் சிறைவாசிகளை திராவிட முன்னேற்றக் கழக அரசு விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...