பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெட்டி படுகொலை..!! குடிபோதையில் ஏற்பட்ட சண்டையில் தீர்த்துக்கட்டிய கும்பல்

பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நான்கு பேரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் தீர்த்துக்கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: இரண்டு பெண்கள் உட்பட நான்பேரை வெட்டி சாய்த்துவிட்டு தப்பியோடிய மூன்று பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் விட்டுச்சென்ற பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூர் கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் செந்தில்குமார் 47. இவரது உறவினர்கள் பழனிசாமி மகன் மோகன்ராஜ் 49. பழனிசாமி மகள் புஷ்பவதி 67. சுப்பிரமணியம் மனைவி ரத்தினாம்பாள் 58 ஆகிய நான்கு பேரும் அறிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.



அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.



பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொல்லப்பட்டதை கண்டித்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி இந்த மறியல் போராட்டத்தை தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் ப்ரீசர் பாக்ஸ் இல்லாத காரணத்தால் போராட்டம் நடைபெற்றது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

செந்தில்குமாரிடம் டிரைவராக வேலை பார்த்த வெங்கடேசன் மற்றும் அவருடன் வந்த 2 பேரும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக போலீசாரின் முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்து கொலை செய்துவிட்டு மூன்று பேரும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.



கொலையாளிகள் விட்டுச் சென்ற இரண்டு பைக்குகள் மற்றும் சிசிடிவி., காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணரை வரவழைத்து போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...