தாராபுரத்தில் ரூ.4 கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் - காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறப்பு

திருப்பூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை காணொலி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.



கோவை: வேளாண்மை துறையின் மூலமாக விவசாயிகளுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.



தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பஞ்சப்பட்டியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டடத்தை திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை வகித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. தாராபுரம் பகுதியில் கிட்டங்கி, பரிவர்த்தனைக் கூடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் விவசாயிகள் தனியார் கிட்டங்கியில் இருப்பு வைத்து வந்தனர்.

மேலும் அக்கிட்டங்கிகள் தொலைவில் உள்ளதால் போக்குவரத்து செலவு மற்றும் அதிக வாடகை காரணமாக பொருளாதர இழப்பைச் சந்தித்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்குத் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் பயன்பாடுகளும் சேவையும் முழுமையாக சென்றடையாதயாத நிலை இருந்தது.



இதனடிப்படையில் தாராபுரம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டடம் கட்டப்பட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றைய தினம் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 1000 மெ.டன் கிட்டங்கி, ரூ.85.00 இலட்சம் மதிப்பீட்டில் பரிவர்த்தனை கூடம் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அலுவலக கட்டிடம், ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் உலர்களம், ரூ. 61.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மற்றும் சுகாதர வசதி, ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் என உட்கட்டமைப்பு மொத்தம் ரூ.4.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



இவ்வாறு வேளாண்மை துறையின் மூலமாக விவசாயிகளுக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.



அதனைத் தொடர்ந்து, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்களை கொண்டு உழவு பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ரூ.42.40 இலட்சம் மதிப்பிட்டில் ரூ.16.00 இலட்சம் மானியத்தில் 20 விவசாயிகளுக்கு பவர்டில்லர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் ஜெயக்குமார், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பதமநாதன், தனி அலுவலர் (திருப்பூர் உதவிப்செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவிப்பொறியாளர் எஸ்.வி.செந்தில்குமார், முதுநிலை செயலாளர் (பொ) சுரேஷ்பாபு, தாராபுரம் கண்காணிப்பாளர் விற்பனைக்குழு) மகாதேவன், வேளாண் பொறியியல்துறை நிர்மலா, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கமலக்கண்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...