கோவையில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே சாமிநாதன் என்பவர் குடிபோதையில் தனது மனைவி மாரியம்மாளை கொலை செய்த வழக்கில், கணவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: சிறுமுகை அருகே மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில்வசிக்கும் டேவிட் என்பவரது மகன் சாமிநாதன்(62).

இவர் குடிபோதையில்கடந்த 02.03.2020 ஆம் தேதி அவரது மனைவியான மாரியம்மாள் (62) என்பவரைகொலை செய்த குற்றத்திற்காகசிறுமுகை காவல் நிலையத்தில் காவல்ஆய்வாளரால், சாமிநாதன் (62) மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை மாவட்டம் கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (04.09.2023) சாமிநாதனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமாக விதித்துநீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்றமுதல் நிலை காவலர் 274 நந்தகுமார் ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...