ராணுவத்தில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ராணுவ வீரருக்கு ஊர்மக்கள் விழா எடுத்து பாராட்டு!

இந்திய ராணுவத்தில் 22 வருடம் பணியாற்றிய ராணுவ வீரர் மணிராஜுக்கு, கோவை கூடலூர் கவுண்டம்பாளையம் விஜயலட்சுமி நகரில் உள்ள பி.ஆர்.கார்டன் மண்டபத்தில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பிரிவுபச்சார விழா மாலைகள் அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் பெருமைப்படுத்தினர்.



கோவை: இந்திய ராணுவத்தில் 22 வருடம் பணியாற்றிய ராணுவ வீரர் மணிராஜுக்கு ஊர்மக்கள் ஒன்று திரண்டு விழா எடுத்து பாராட்டு தெரிவித்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் கவுண்டம் பாளையம். தங்கதுரை மற்றும் மணிமேகலை தம்பதியரின் மகன் மணிராஜ் (39). இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இராணுவத்தில் சேர்ந்து ஜம்பு-காஷ்மீர், அஸ்சாம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களில் வேலை செய்து தற்பொது ஓய்வு பெற்றுள்ளார்.

அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்த ஊர் மக்கள் முடிவு செய்து நாயக்கம்பாளையத்தை சேர்ந்த இராணுவத்தில் வீர மரணம் அடைந்த இராணுவ வீரர் நாயக்கண்ணாளன் கென்னடி குடும்பத்தினர் தலைமையில் ராணுவ வீரர் மணிராஜ்க்கு விழா எடுத்தனர்.



இந்நிகழ்ச்சியில் இராணுவ வீரர் மணிராஜை ஊர்வலமாக அழைத்து வந்து விஜயலட்சுமி நகரில் பிரமாண்டமாக அமைந்துள்ள பி.ஆர்.கார்டன் மண்டபத்தில் ஊர் மக்கள் ஒன்று திரண்டு மாலை அணிவித்தும், சாலவை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் கவுரவித்தனர்.

இதில் அம்பிகா பீடியார்டிக் ஹேப் மற்றும் ரி-ஹேப் சென்டர் தலைவர் டாக்டர்.ரேணுகா மணிராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னாள் ராணுவ வீரர்கள் மாரியப்பன், முருகேசன், லட்சுமணன், கோபால், பரமசிவம், மல்லிகர்ஜுனன், பாபு, முருகன், சாத்துருப்பன், அழகிரிசாமி, சபரிநாதன், மற்றும் கூடலூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவர் ஜெகன்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசும்போது நமது ராணுவம் உலக அளவில் 4வது இடத்தில் உள்ளது என்று கூறினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து இராணுவத்தில் இணைந்து பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்களை வரவழைத்து அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கியும் கவுரவித்தனர்.



தொடர்ந்து நடைபெற்ற விழாவில் வாராகி மணிகண்டன் சுவாமிகள், சரவணம்பட்டியை சேர்ந்த கெளமாரா பிரசாந்தி அகடாமியின் தலைவர் தீபா மோகன்ராஜ், கோவில்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் சுவர்ணாம்பிகை சதீஷ்குமார் வாழ்த்தி பேசினர்.



சிறப்பு விருந்தினர்களாக கூடலூர் நகர் மன்றத்தலைவர் அ.அறிவரசு, யு.ஐ.டி குழும சேர்மன் சண்முகம், பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் தாமோதிரன், கூடலூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் அகில் மா.சந்திரசேகரன், சங்கீதா செந்தில்குமார், பி.ஆர்.கார்டன் உரிமையாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினர்.



மேலும் இந்த விழாவில் நேதாஜி நற்பணி மன்றம், அப்துல்கலாம் நற்பணி மன்றம், அண்ணா சமூக நல அறக்கட்டளை நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் ராணுவ வீரருக்கு சால்வைகள் அனுவித்து நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர்.



தொடர்ந்து பேசிய இராணுவ வீரர் மணி ராஜ் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றது பெருமையாக உள்ளதாகவும், நான் இந்த அளவிற்கு உயர்ந்ததிற்கு என் மனைவியின் உத்வேகமே காரணம் என்றும் கோவையில் மக்கள் அதிகளவில் ராணுவத்தில் சேருவதில்லை என்றும், ஆனால் வெளி மாநிலங்களில் ராணுவத்தில் சேர்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றும், நம் ஊர் மக்களும் ராணுவத்தில் அதிக அளவில் சேர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தனக்கு பிறகு எனது ஊரில் இருந்து ஒருவர் கூட இராணுவத்தில் சேரவில்லை என்பது வருத்தம் அளிப்பதாகவும், இனி வரும் காலங்களில் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்காக உதவிகள் செய்யப் போவதாக தெரிவித்தார்.



தொடர்ந்து மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்ற தேச பக்திப் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் நினைவு பரிசுகளை வழங்கினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...