கோவையில் சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் தலைமையில் ஆய்வு கூட்டம்!

சட்ட பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தணிக்கை பத்திகள் மீதான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.


கோவை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் தலைமையில் தணிக்கை பத்திகள் மீதான ஆய்வு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தரபாண்டியன் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில் தணிக்கை பத்திகள் மீதான துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது குழு நிறுவனங்கள் குழு உறுப்பினர்கள் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், கிரி, கோவிந்தசாமி, செந்தில்குமார், பிரகாஷ் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை இணை செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் ஆறு பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களில் வழங்கப்படும். வீட்டுமனை ஒப்படைப்புக்கான இணைய வழி பட்டாக்களையும் சாலை விபத்தில் மரணம் அடைந்த பத்து நபர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் தலா ஒரு லட்சம் ரூபாய் கான நிவாரண நிதிக்கான காசோலை, தாட்கோ சார்பில் 19.10 லட்சம் மானியத்தில் ஐந்து பயனாளிகளுக்கு லோடு ஆட்டோ சுற்றுலா வாகனங்களுக்கான கடன் உதவிகளையும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ள 7 தூய்மை பணியாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஆணைகளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சௌந்தர பாண்டியன் வழங்கினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...