வால்பாறை அருகே டீசல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து!

வால்பாறை அடுத்த வாட்டர்பால்ஸ் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீப்பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



கோவை: வால்பாறை அருகே வாட்டர் பால்ஸ் எஸ்டேட் பகுதியில் டீசல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இருந்து வால்பாறை போக்குவரத்து பணிமனைக்கு காளி என்பவர் டீசல் லாரியை ஒட்டி வந்து உள்ளார். அந்த லாரியில் 12 ஆயிரம் லிட்டர் டீசல் இருந்து உள்ளது.



இந்நிலையில், வால்பாறைக்கு வரும் வழியில் வட்டார்பால்ஸ் என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த லாரியானது, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பினார்.



இதனிடையே விபத்தில் சிக்கிய லாரியை ஒட்டி வந்த ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில், லாரியில் இருந்து டீசல் சாலையில் வெளியேறி உள்ளது.



இதுகுறித்து தகவலறிந்த தீ அணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சாலையில் ஓரம் பகுதியில் லாரி விழுந்து உள்ளதால் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை. மேலும் லாரியில் உள்ள டீசலை வேறு லாரிக்கு மாற்றப்பட்டு, பின் விபத்துக்குள்ளான லாரியை ஜேசிபி மூலம் அகற்றப்படும் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...