பீக் ஹவர் கட்டணத்திற்கு எதிர்ப்பு: வரும் 7ம் தேதி திருப்பூரில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பு உண்ணாநிலை

சிறு குறு தொழிலை செய்ய முடியாத நிலையில் தமிழகத்தில், பீக் ஹவர் என்ற கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், 430 சதவிகித நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம், கோரிக்கை அளித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் டேக்ட் ஜேம்ஸ் புகார் கூறியுள்ளார்.



கோவை: தமிழ்நாடு தொழில் துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் சார்பாக தொழில் துறையினர் சந்தித்து வருகின்ற பல்வேறு குறைகள் தமிழக முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாப்பநாயக்கன்பாளையத்தில் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.



கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர்களான ஜெயபால், டேக்ட் ஜேம்ஸ், முத்து ரத்தினம், சுருளி வேல், திருப்பூர் ஸ்ரீ காந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது டேக்ட் ஜேம்ஸ் கூறியதாவது...



பல வருடங்களாக தொழில் துறையினருக்கு மூலப்பொருட்களை வழங்கி வந்த மாநிலங்கள் பல்வேறு மானியங்களை அறிவித்துள்ளது. இதனால், தொழில் துறையினர் தொழிலை அதிக படுத்த பல்வேறு, இடங்களில் புதிய உற்பத்தியை துவங்க முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறு குறு தொழிலை செய்ய முடியாத நிலையில் தமிழகத்தில், பீக் ஹவர் என்ற கட்டணத்தை திரும்ப பெற வேண்டும், 430 சதவிகித நிலை கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தளர்த்த வேண்டும், என்று மத்திய மாநில அரசுகளிடம், கோரிக்கை அளித்தும், இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து வருகின்ற 07.09.2023 அன்று, திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம் பேட்டை, பகுதியில் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த உண்ணாவிரத போராட்டமானது நாங்கள் அன்பவித்து வருகின்ற பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக தமிழக முதல்வர், புரிந்து கொண்டு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டு்ம், இல்லை என்றால் அடுத்தடுத்த போராட்டங்கள் தொழில் துறையினர் முன்னேடுக்க உள்ளதாக கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...