உதயநிதி தலைக்கு விலை நிர்ணயத்த விவகாரம் - திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் அயோத்தி சாமியரின் உருவப்படம் எரிப்பு

சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பினர்.



சனாதனம் குறித்த அவதூறாக பேசியதாக உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை வால் வைத்து கிழித்து பத்து கோடி ரூபாய் தருவதாக அறிவித்த அயோத்தி சாமியாரின் உருவப்படத்தை திருப்பூரில் தமிழ் புலிகள் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட திமுகவின் இளைஞரணி செயலாளரும், மாநில விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாகவும், அதற்கு அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சாரியா என்ற சாமியார் உதயநிதி ஸ்டாலின் உருவப்படத்தை கத்தியை கொண்டு கிழித்தும், அவரது தலைக்கு 10 கோடி ரூபாய் என அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.



இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவப்படத்தை தமிழ் புலிகள் கட்சியினர் தீயிட்டு எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...