இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்களின்‌ வரிசையில்‌ ஏஜசி ரைஸ் இடம்பிடிப்பு‌..!!

இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.


இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின்‌ நிதி ஆயோக்‌, அடல்‌ இன்னோவேஷன்‌ மிஷன்‌ மற்றும்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகள்‌ கூட்டமைப்பு ஆகியவற்றினால்‌ ஆதரிக்கபடுகின்ற இந்தியாவின்‌ முதல்‌ ஐக்கிய நாடுகளின்‌ நிலையான வளர்ச்சிக்‌ கோட்பாடுகளை மையமாகக்‌ கொண்டு செயல்படும்‌ இன்குபேட்டரான ஏஜசி ரைஸ்‌, தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்க்கு கீழ்‌ இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்க்கான தரவரிசைப்‌ பட்டியலில்‌ இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின்‌ சிறந்த இன்குபேட்டர்க்கான இத்தேர்வானது தொழில்‌ முனைவுத்‌ துறையில்‌, தொழில்‌ முனைவோர்களின்‌ தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும்‌ அவர்களின்‌ பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பு ஆகியவற்றிக்கான ஓர்‌ அங்ககாரமாகக்‌ கருதப்படுகிறது.

மேலும்‌, ஏஜசி ரைஸ்‌ புதுமையான தொழில்‌ முனைவோர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது மற்றும்‌ தொழில்‌ முனைவோர்‌ சுற்றுச்சூழலுக்கான ஆதரவை வழங்குகிறது. தொழில்முறை மற்றும்‌ தொழில்நுட்ப நிபுணர்களின்‌ வழிகாட்டுதல்‌ முதல்‌ தொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களுக்குப்‌ பரிந்துரைத்தல்‌ வரை, ஏஜசி ரைஸ்‌ தொழில்‌ முனைவோர்களுக்குத்‌ தேவையானத்‌ வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

இது குறித்து ஏஜசி ரைஸின்‌ தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்‌. மதன்‌ ஏ செந்தில்‌ அவர்களுடனான உரையாடலின்‌ போது “தேசிய இன்குபேட்டர்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ திட்டத்திற்கான இந்தியாவின்‌ சிறந்த 25 இன்குபேட்டர்களில்‌ ஒன்றாக ஏஜசி ரைஸ்‌ தேர்ந்தெடுக்கப்பட்டதிற்காக மகிழ்ச்சியடைகிறோம்‌. இத்தேர்வானது ஏஜசி ரைஸின்‌ வளர்ச்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்‌. இந்த அங்கீகாரமானதுத்‌ தொழில்முனைவோர்களை உருவாக்குதல்‌ மற்றும்‌ தொழில்‌ முனைவுத் துறைச்‌ சூழலின்‌ வளர்ச்சிக்கான எங்களின்‌ பங்களிப்பினை அடிக்கோடிட்டுக்‌ காட்டுகிறது.” என்று கூறினார்‌.

தொழில்‌ முனைவுத்‌ துறைச்‌ சார்ந்தத்‌ தங்கள்‌ சந்தேகங்களுக்கு 770801922, 7708034222 மற்றும்‌ ww.aicraise.com என்ற இணையதளம்‌ வாயிலாகத்‌ தொடர்புக்‌ கொள்ளலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...