பீக் ஹவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதம் - சிறு, குறு நிறுவனங்கள் பங்கேற்க முடிவு!

பீக் ஹவர்ஸ் கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் செப் 7ஆம் தேதி நடைபெறவுள்ள தொழில் துறையினரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என திருப்பூரில் நடைபெற்ற சிறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: பீக் ஹவர்ஸ் கட்டணம் மற்றும் நிலை கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் சிறு சிறு நடுத்தர நிறுவனங்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிதாக மின்வாரியத் துறை சார்பில் அமல்படுத்தப்பட்ட பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் தொழில்துறையினரை மிகப்பெரும் அளவில் பாதிப்படைய செய்துள்ளது.

அதனை திரும்ப பெற வலியுறுத்தி ஒன்பது மாத காலமாக பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே தொழில்துறையை பாதுகாக்கக்கூடிய வகையில் பீக் ஹவர்ஸ் மற்றும் நிலை கட்டணம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என மின்வாரியம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் வரும் 7 ஆம் தேதி காரணம்பேட்டை பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.



இது குறித்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து சிறு குறு தொழில் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது.



அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் பெரும் திரளாக கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



அரசு மின் கட்டண உயர்வினை திரும்பப்பெறும் வரையில் தங்களது போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...