உடுமலையில் காவல்துறையை கண்டித்து டி.எஸ்.பி அலுவலகம் முற்றுகை!

உடுமலை அடுத்த தும்பலபட்டி கிராமத்தில் இரண்டு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சம்பவத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: உடுமலை அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் டி எஸ் பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள தும்பலப்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் விநாயகர் கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.



இந்த நிலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு தரப்பினருக்கு மட்டும் ஏழு பேர் கைது செய்யபட்டதை கண்டித்து à®¤à¯à®®à¯à®ªà®²à®ªà®Ÿà¯à®Ÿà®¿ ஊராட்சி சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உடுமலை டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காவல்துறையினர் ஒரு தலைபட்சமாகநடந்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கிராம மக்கள் தரப்பில் கொடுத்தமனுவில் உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் உறுதிஅளிக்கபட்டதால் à®“ரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற போராட்டம் தற்காலிமாக முடிவுக்கு வந்தது.

இருப்பினும் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். உடுமலையில் காவல்துறையை கண்டித்து டிஎஸ்பிஅலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...