வடவள்ளியில் அதிகாலையில் பற்றி எரிந்த துணி அயன் கடை..!! மர்ம நபர்கள் சதியா? என போலீசார் விசாரனை.!

கோவை வடவள்ளியில் ஆறுசாமி என்பவருக்கு சொந்தமான துணி அயன் செய்யும் கடை அதிகாலையில் பற்றி எரிந்தது. இதில் கடையில் இருந்த அனைத்து துணிகளும் எரிந்து நாசமானது.


கோவை: அயன் கடை பற்றி எரிந்தது பற்றி காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் கடை பற்றியதா? அல்லது கடைக்கு யாரேனும் தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் விசாரனையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர்.

கோவை வடவள்ளி அருகே உள்ள பெரியார் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் பிரபா (வயது 65). இவரது வீட்டின் முன்பு ஆறுச்சாமி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக துணி அயர்ன் செய்யும் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இன்று அதிகாலை திடீரென அந்த அயர்ன் கடை தீப்பிடித்து எரிந்தது.

அந்த வழியாகச் சென்றவர்கள் இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கடையில் இருந்த துணிகளும் தீக்கிரையானது. இதுபற்றி வடவள்ளி போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அந்த கடைக்கு யாராவது தீவைத்தார்களா, அல்லது விபத்து காரணமாக தீப்பிடித்ததா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...