பல்லடம் அருகே டாஸ்மாக் கடை மூடும் அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் அந்த டாஸ்மாக் கடை செயல்படாது என தாசில்தார் அறிவித்ததை பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் இன்று முதல் செயல்படாது என தாசில்தார் அறிவித்ததை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள 1830 டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் விபத்துக்கள் மட்டுமின்றி கொலை கொள்ளைக்கு காரணமாக இந்த கடை இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் கள்ளகினர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் சார்பில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.



அதன்படி இன்று நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



பேச்சுவார்த்தை முடிவில் இந்த டாஸ்மார்க் கடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கடை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...