சிறுவாணி அணை தொடர்பாக கேரள முதல்வரிடம் பேச்சு வார்த்தை… அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.!

இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் வைத்தாலும் சரி, இந்தியா என்றாலும் சரி, நாங்க ஒன்றிய அரசு என்று தான் கூறுவோம் என்று கோவையில் அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.



கோவை: வ உ சி மைதானத்தில், கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமியும் கலந்துகொண்டனர்.



கோவை வ உ சி மைதானத்தில், கோவை மாவட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகளில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், புதிய பணிகளை துவக்கி வைத்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு ரூ.11.8 கோடி மதிப்பீட்டில் 27 முடிவற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், ரூ.67.48 கோடி மதிப்பீட்டில் 558 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.32.12 கோடி மதிப்பீட்டில் 703 பயனாளிகள் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ110.68 கோடி திட்டங்களை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் முத்துச்சாமி பேசுகையில்;- கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிகள் நடைபெற்று வருகின்றது. வேண்டும் என்ற பணிகளை அதிகாரிகள் கேட்டு பெற்று வருகின்றனர். நமது நகராட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு அவர்கள் கேட்கும் திட்டங்களை நிதி நிலைமையை பார்த்து வழங்குகின்றார். தமிழக முதல்வர் அவர்கள் 22 மற்றும் 23 ம் தேதிகளில் கோவை வருகை தர உள்ளார். அப்போது கோவை மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

அதனைத்தொடர்ந்து அமைச்சர். கே.என்.நேரு பேசுகையில்;-



முதல்வர் உத்திரவிற்கு இணங்க கோவைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சாலை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், உலகத்தில் சிறப்பான குடிநீர் கோவையில் உள்ளது. தண்ணீர் 298 எம் எல் டி வரவேண்டும். 214 எம் எல் டி தான் வந்து கொண்டுள்ளது. பில்லூர் ஒன்றில் 27 எம் எல் டி, பில்லூர் இரண்டில் 105 எம் எல் டி, ஆழியாரில் 8 எம் எல் டி, சிறுவாணி 98 எம்எல்டிக்கு பதிலாக, 68 எம்எல்டி தான் வந்து கொண்டுள்ளது. 386 எம்எல்டி வரவேண்டும். பில்லூர் மூன்றாம் குடிநீர் திட்டம் நிறைவேற உள்ளது. ஒன்றை கிலோ மீட்டர் மட்டும் தான் பணி உள்ளது.

சீக்கிரமாக இந்த பணி முடித்து விடும். அக்டோபர் முதல் வாரத்தில் 178 எம் எல் டி சுத்தப்படுத்தப்பட்ட குடிநீர் வந்துவிடும். இதன்மூலம் தினந்தோறும் குடிநீர் வந்துவிடும். சிறுவாணி அணை தொடர்பாக கேரள முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. கோவை மாநகரை பொறுத்தவரை அனைத்து சாலைகளும் புதியதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மோசமான சாலைகள் என எந்த சாலை என்று நீங்கள் குறிப்பிட்டு சொன்னால் நாங்கள் அதை பார்த்து விடுவோம். கோவையில் மொத்தம் 680 கிலோமீட்டர் சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளோம். கோவை மாநகராட்சியில் ஆய்வு பண்ண உள்ளோம். உத்திரபிரதேசம் சாமியார் பற்றிய கேள்விக்கு? சாமியார் சொல்வதெல்லாம் செய்ய முடியுமா? அதற்கு உதயநிதி அவர்களே பதில் கொடுத்து விட்டார். இந்தியாவிற்கு பாரத் என்று பெயர் வைத்தாலும் சரி, இந்தியா என்றாலும் சரி, நாங்க ஒன்றிய அரசு என்று தான் கூறுவோம் என்றார்.



இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, நகராட்சி நிர்வாகம் முதன்மை செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநர் கிரண்குராலா, மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணைமேயர் வெற்றிச்செல்வன், எம்பிக்கள் சண்முகசுந்தரம், பிஆர்.நடராஜன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், மற்றும் மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...