திராவிடத் தமிழர் கட்சியின் சார்பில் கோவையில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டம்..!!

உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தை திராவிடர் தமிழர் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.



கோவை: உதயநிதிக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், We Support Udhayanithi Stalin, We Denied Sanadana Dharma, Untouchability, Unseeability, Unspeakability is Sanadana ஆகிய பதாகைகளை ஏந்தியடி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் "சனாதனம்" என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.



உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தை திராவிடர் தமிழர் கட்சியினர் முன்னெடுத்துள்ளனர்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் வெண்மணி தலைமை வகித்தார்.



மேலும் இதில் ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ரவிக்குமார் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொருளாளர் சாஜித் உட்பட கலர் கலந்து கொண்டு சனாதன ஒழிப்பு குறித்தான பதாகைகளை ஏந்தியும், We Support Udhayanithi Stalin, We Denied Sanadana Dharma, Untouchability, Unseeability, Unspeakability is Sanadana ஆகிய பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...