கிருஷ்ண ஜெயந்தி விழா - தாராபுரம் கோவில்களில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு சிறப்பு வழிபாடு!

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி தாரபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு அழைத்து வந்து வழிபட்டனர். அப்போது குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.



திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஏராளமான கோவில்களில் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டது.

மகாவிஷ்ணுவின் 8-வது அவதாரம் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகு லாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயர்களில் ரோகினி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் வரும் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் வீட்டு பூஜை அறையில் கிருஷ்ணர் சிலை வைத்து, மா இலை தோரணங்கள் கட்டி, அரிசி மாவினால் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தையின் பாதங்கள் பதித்து பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.



இதனையொட்டி, தாராபுரம் அக்ரஹாரம் தெருவிலுள்ள கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது.



அங்கு ஏராளமான பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து அழைத்து வந்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல தாராபுரம் கரூர் செல்லும் சாலையில் ராஜவாய்க்கால் அருகே அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.



இதில் குழந்தைகள் கிருஷ்ணன், ராதா உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் வந்திருந்தனர்.



அப்போது அங்கு வந்திருந்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசும் மற்றும் மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...