பல்லடம் - செட்டிப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

பல்லடம் - செட்டிப்பாளையம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தையடுத்து கடை செயல்படாது என வட்டாட்சியர் அறிவித்திருந்த நிலையில், டாஸ்மாக் கடை மேலாளர் மீண்டும் கடையை திறந்துள்ளதை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் செட்டிப்பளையம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கடை குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள இடத்தில் உள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக்கோரி ஏராளமான புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.



இதனிடையே பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக பல்லடம் வட்டாட்சியர் ஜெய்சிங் சிவக்குமார், இன்று காலை டாஸ்மாக் கடைக்கு நேரில் வந்து கடையை மூடும்படி உத்தரவிட்டார்.



இதனால் மகிழ்ச்சியில் கொண்டாடிய மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புக்கள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொதுமக்களின் மகிழ்ச்சி சில மணி நேரம் கூட தாக்குபிடிக்காத சூழலில் டாஸ்மாக் மேலாளர் மீண்டும் டாஸ்மாக் கடையை திறக்க உத்தவிட்டார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பாக தரையில் பாய் விரித்து அமர்ந்து ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே சுமார் 2 மணி நேரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி சவுமியா டாஸ்மாக் கடையை உடனடியாக மூட உத்தரவிட்டதை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

வட்டாட்சியர் பூட்டுவதும், மேலாளர் திறப்பதுமாக சிறுபிள்ளை தனமாக விளையாடிய விளையாட்டு பொதுமக்களை கடுப்படைய வைத்தது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...