விலைவாசி உயர்வுக்கு கண்டனம்..!! கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்.!!

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மை ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி கோவையில் ஒன்றிய அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, ஜிஎஸ்டி போன்றவற்றால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக கூறி இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் CPI(M) சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.



இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

கோவையில் ஒன்பது இடங்களில் CPI(M) சார்பில் போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...