செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் ஆய்வு!

கோவை காந்திபுரத்தில் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் ரூ.172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன மேலாண் இயக்குனர் விஜயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.



கோவை காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் ரூபாய் 172.25 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமையவுள்ள இடத்தில் பணிகள் துவங்குவதற்கு பூர்வாங்க பணி மேற்கொள்வது குறித்து தமிழ்நாடு நகர்ப்புற நிதி உட்கட்ட அமைப்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் எஸ். விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வில் நகராட்சி ஆணையாளர் மு பிரதாப், நகர்ப்புற நிதி உட்கட்டமைப்பு நிறுவன முதுநிலை துணைத்தலைவர் ராஜேந்திரன், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் திட்ட இயக்குநர் ராமமூர்த்தி, மாநகர பொறியாளர் சுகந்தி, உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், செயற்பொறியாளர்கள் இளங்கோவன், முருகேசன், மாநகர நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர் கமல கண்ணன் உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...