விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்..!! பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.



கோவை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாகவும், முறையாகவும் வழங்க வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும்,சமூக பாதுகாப்புடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்க கோரியும், 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாகவும், முறையாகவும் வழங்க வலியுறுத்தி மத்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பி.என்.பி ஒன்றிய குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



இதற்கு கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகி அஜய்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.



இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் மத்திய மோடி அரசு கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அதன் காரணமாக சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் மத்திய அரசின் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் குறித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.



தொடர்ந்து அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து எல்.எம்.டபிள்யூ பஸ் ஸ்டாப் வரை கோஷங்கள் எழுப்பிய வண்ணம் ஊர்வலமாக சென்று சாலை மறியல் செய்ய முயன்றனர் அவர்களை போலீசார் தடுத்தனர்.

இந்த போராட்டத்திற்கு அனுமதியில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.நடராஜன் எம்.பி உட்பட 300க்கும் மேற்பட்டவர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பேசும்போது,



கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், விலைவாசி உயர்வை பாதியாக குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று 9 ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அதிகப்படுத்துவதற்கு பதிலாக ஏற்கனவே பணியில் இருந்தவர்களும் வேலை வாய்ப்பை இழக்கும் நிலையை கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே தான் மத்திய அரசின் வேலையின்மை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்ததாததை கண்டித்து இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...