பில்லூர் பிரதான குழாய் உடைந்ததால் கோவை தெற்கு மண்டலத்தில் குடிநீர் விநியோகிப்பதில் இடையூறு



கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் குடிநீர் பெறப்படும் பில்லூர் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், 'கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் பிரதான குழாயில் சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில், வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதனால் மேட்டூர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மற்றும் சாரதா மில் சாலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குட்பட்ட குறிச்சி பகுதிகளுக்கு (வார்டு எண்கள் : 95, 96, 97, 98, 99 மற்றும் 100) குடிநீர் விநியோக இடைவெளி நாட்கள் (இரண்டு அல்லது மூன்று தினங்கள்) கூடுதலாக வாய்ப்புள்ளது'.

இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...