விலைவாசி உயர்வுக்கு கண்டனம்..! உடுமலையில் சிபிஐஎம் சார்பில் தபால்நிலையம் முற்றுகை.!

விலை வாசியை குறைக்க வேண்டும்,பெட்ரோல் டீசல் கேஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும், அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை தலைமை தபால் நிலையத்தை சிபிஐஎம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



திருப்பூர்: விலை வாசியை குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐஎம் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிபிஐஎம் சார்பில் விலை வாசி உயர்வை குறைக்க வேண்டும் ,பெட்ரோல் டீசல் கேஸ்விலையை பாதியாக குறைக்க வேண்டும் அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி உடுமலை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



முற்றுகைப் போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன உடுமலை நகர சிபிஐஎம் நிர்வாகிகள், பால தண்டபாணி குடிமங்கலம் ஒன்றியம் சசிகலா, விஸ்வநாதன் தோழன் ராஜா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதே போல உடுமலை ஒன்றியம் கமிட்டி சார்பாக பள்ளபாளையம் கனரா வங்கி முன்பாக விலைவாசி உயர்வை கண்டித்து வேலையின்மைக்கு எதிராக செப்டம்பர் 7 நாடு தழுவிய மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாலதண்டபானி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட போராட்டத்தில் பெண்கள் 206 உட்பட 450 பேர் கலந்து கொண்டனர்.



இதில், 310 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...