கோவையில் கடைக்குள் புகுந்த கார்: ஒரு ஆண் உட்பட 3 பேர் காயம்..! எப்படி விபத்து ஏற்பட்டது என காவல்துறை விசாரனை

கோவையில் வேகமாக வந்த கார் ஒன்று நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டிவந்தவரும், அதில் பயணம் செய்த இரண்டு பெண்களும் படுகாயமடைந்தனர்.


கோவை: சாலையோரத்தில் இருந்த கடைக்குள் கார் புகுந்த விபத்து ஏற்படுத்தியது சாலையில் சென்றவர்களை பதபதவைக்கும் வகையில் இருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

கோவை-திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் போலீஸ் நிலையம் அருகே இன்று காலை ஒரு கார் வேகமாக வந்தது. அப்போது நிலைதடுமாறி அருகில் உள்ள கடைக்குள் புகுந்தது. இதில் காரை ஓட்டி வந்த ஒரு ஆண் மற்றும் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைக்குள் கார் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக ரோட்டில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...