தாராபுரத்தில் சாக்கடை கழிவால் துர்நாற்றம் - பொதுமக்கள் சாலை மறியல்!

தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையம் மற்றும் சூளைமேடு குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு சென்றதாகவும், இதனால், துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே, குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவு கொட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரத்தை அடுத்துள்ள உப்புத்துறைபாளையம், சூளைமேடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை, நகராட்சி வாகனத்தில் சாக்கடை கழிவுகளை கொண்டு வந்து இந்த பகுதியில் கொட்டி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.



இதனால், துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், வி.சி.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ்முத்து, நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில், நேற்று மதியம் 3:00 மணியளவில், தாராபுரம் - பழனி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமதானம் செய்தனர்.

மேலும் அங்கு வந்த தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், மாலைக்குள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இந்த மறியல் போராட்டத்தில், வி.சி.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் முத்தமிழ் வேந்தன், மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், நகர பொருளாளர் கரிகாலன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...