கிருஷ்ணரை வரவேற்க கண்ணன், ராதை வேடமிட்டு உற்சாக நடனமாடிய மூத்த குடிமக்கள்!

தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில், மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை: தாளியூரில் உள்ள மூத்த குடிமக்கள் குடியிருப்பில் கோகுலாஷ்டமி விழாவில் மூத்த குடிமக்கள், கண்ணன் மற்றும் ராதை வேடமிட்டு ஆடி பாடி கிருஷ்ணரை வரவேற்றனர்.



கோவை மாவட்டம் தாளியூரில் உள்ள மூத்த குடிமக்களின் குடியிருப்பான அனன்யா'ஸ் நானாநானி ஹோம்ஸில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி விழாவானது வெகு விமரிசையாக நடைபெற்றது.



இதை முன்னிட்டு காலை கோ பூஜை, நவகலச திருமஞ்சனம், விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. தொடர்ந்து, மாலை தங்கத்தேர் திருவீதி உலா புறப்பாடு நடைபெற்றது.



இதில், மூத்த குடிமக்கள் ராதா கிருஷ்ணர் வேடமிட்டு ஆடியும் பாடியும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வரவேற்றனர்.



இங்குள்ள மூத்த குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடினர். இந்நிர்வாகத்தின் இயக்குநர் Dr.உமா மகேஸ்வரி யுவராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் இறுதியில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...