அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சாமியார் உருவபொம்மை எரிப்பு!

சனாதன சர்ச்சை தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரை கண்டித்து வால்பாறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர், அவரது உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.



கோவை: அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரின் உருவ பொம்மை எரித்து வால்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச் செயலாளர் சுதாகர் தலைமையில், நகராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாமியாரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்ய சாமியாரின் உருவ பொம்மை எரித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.



வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற திமுகவினரின் ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...