தாராபுரம் அருகே மாணவர் விடுதி காப்பாளர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு - பரபரப்பு!

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பிஷப்தார்ப் மாணவர் விடுதியின் காப்பாளரான வினித்குமார் நேற்றிரவு தனது அறையிலேயே தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் உள்ள பிஷப்தார்ப் கல்லூரியின் விடுதி காப்பாளர் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிஷப்தார்ப் மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர் விடுதியின் காப்பாளர் மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது, பிஷப் தார்ப் மாணவர் விடுதி தாராபுரம் - பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.



இவர்களுக்கு பாதுகாவலாராக கோவை மாவட்டம் வால்பாறை பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த இஸ்ரவேல் மகன் வினித்குமார் (25), என்பவரை விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஓராண்டு காலமாக விடுதி காப்பாளராக இருந்து வருகிறார்.

காப்பாளர் வினித் குமார் வழக்கம் போல 7 மணிக்கு விடுதியில் மாணவர்களை பார்க்க வருவது வழக்கம் ஆனால் நேற்றிரவு வரவில்லை. இதனால் சந்தேகம் எழுந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது வினித்குமார் தங்கி இருந்த அறையின் மின்விசிறியில் போர்வையை கொண்டு தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

வெகு நேரமாகியும் முயன்றும் அறை திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது உள் தாழிட்டு இருந்தது தெரியவந்தது. அப்போது மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தூக்கில் தொங்கியபடி வினித் குமார் இருந்துள்ளார்.

அவர்கள் உடனடியாக பெற்றோர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



தகவலின்பேரில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேதத்தை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து போன மாணவர் விடுதி காப்பாளர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...