கோவையில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டம் - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 251 வது மாநில செயற்குழு கூட்டத்தில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கோவை: கோவை காந்திபுரத்தில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் INTUC- இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் 251 வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி கவுன்சிலை சேர்ந்த துளசிதாஸ், சண்முகம், மதியழகன், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இதில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. மாவட்ட மாநாடுகள் நடத்துவது, மின்வாரிய தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பது.

2. போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகளான போக்குவரத்து தொழிலாளர்களை கழகங்களாக பிரிப்பதற்கு முன்பு இருந்தது போல் அரசு ஊழியர்கள் ஆக்குதல்.

3. பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் இருந்து பண பயன் வழங்குதல்.

4. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குதல்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...