துடியலூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை துடியலூர் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக வந்த பஜீரோ கார் மோதி விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த கார் விபத்து நடந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: துடியலூர் அருகே நின்றிருந்த லாரி மீது கார் ஒன்று பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி பகுதியில் சாலை ஓரத்தில் சரக்கு லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது.



அப்போது கோவை நோக்கி அதிவேகமாக வந்த பஜீரோ கார் லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து கோவை மேற்கு போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...