அன்னூர் அரசுப் பள்ளியில் சத்துணவை சாப்பிட்டு பார்த்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

அன்னூர் அடுத்த பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை வாங்கி சுவைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.


கோவை: அன்னூர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த பட்டக்காரன் புதூர் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய வகுப்பறைகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சமையலறைக்கு சென்று ஆட்சியர் கிராந்திகுமார், மாணவர்களுக்காக தயார் செய்த உணவு மற்றும் சாம்பாரை ஆய்வு செய்தார்.

மேலும் சாப்பாட்டை வாங்கி சுவைத்து பார்த்த ஆட்சியர் மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது, சாம்பாரில் என்னென்ன காய்கறிகள் போடப்படுகிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.



அதன் பின்னர் அங்கிருந்து பள்ளி வகுப்பறைக்கு சென்ற ஆட்சியர் கிராந்தி குமார், மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது புத்தகத்தைப் பார்த்து மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்திய ஆட்சியர், அவர்களிடம் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், அன்னூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் எம்.எஸ். பொன்னுசாமி, துணைத் தலைவர் கே.சி.ரவிக்குமார், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் உபைத் ரகுமான், பொறியாளர் தங்கமணி உட்பட பலர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...