தமிழ் மொழி விழிப்புணர்வு..!! உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கோவையை சேர்ந்த 9 வயது சிறுவன்.!

தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 9வயது சிறுவன் 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் விளக்கவுரையாற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.


கோவை: 63 நாயன்மார்களின் வரலாற்றை விளக்கிய ஒன்பது வயது சிறுவன் பவேசின் சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை நோபல் புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா மற்றும் காவல் ஆய்வாளர் மீனாகுமாரி ஆகியோர் வழங்கி சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 9வயது சிறுவன் 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் விளக்கவுரையாற்றி உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பிரசன்னகுமார்-நளினி தம்பதியினரின் ஒன்பது வயது மகன் பவேஷ். 5ஆம் வகுப்பு பயிலும் இந்த சிறுவன், சிறுவயதில் இருந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சிறுவனின் ஆர்வத்தை கண்ட பெற்றோர் அவருக்கு தமிழ் மீதான பயிற்சிகளை வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவன் பவேஷ் தமிழ் மொழியின் உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 63 நாயன்மார்களின் வரலாற்றை 63 நிமிடங்களில் பொதுமக்கள் முன்பு தனி தனியாக விளக்கவுரையாற்றி பிரமிக்க வைத்தார்.

சிறுவனின் இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழ்களை நோபல் புத்தகத்தின் இயக்குனர் ஹேமலதா மற்றும் காவல் ஆய்வாளர் மீனாகுமாரி ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...