தாராபுரத்தில் நிலத்திற்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் தொடர் போராட்டம்: 27-வது நாளில் சங்கு ஊதி எதிர்ப்பு

தாராபுரம் நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணையின் கட்டுமானப்பணிக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீட்டுத்தொகை கேட்டு 27ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: 27-வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் சாமியிடம் குறி கேட்டு சங்கு ஊதி சாட்டையால் சாமியாடி விவசாயி தன்னைத்தானே அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டது அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொன்னிவாடி கிராமத்தில் உள்ள நல்லதங்காள் ஓடை நீர் தேக்க அணையின் கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750- ஏக்கர் நிலத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 1997 ஆம் ஆண்டு கையகப்படுத்தி 2000ஆம் ஆண்டு அணை கட்டுமான பணிகளை தொடங்கினர்.

அப்போது விவசாயிகளிடம் அணை கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய விலை நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகை வழங்குவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்து நிலத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆனால் விவசாயிகள் இடம் கூறியவாறு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இந்த இழப்பீட்டுத் தொகையை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அல்ல 2017 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சேர்த்து கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த 24 ஆண்டுகள் ஆகியும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த விவசாயிகள் பலர் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமலே இறந்துவிட்டனர்.



இருப்பினும் தற்போதுள்ள 150 விவசாயிகள் கோனேரிப்பட்டி பகுதியில் கடந்த 27 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்த 27 வது நாள் தொடர் காத்திருப்போம் போராட்டத்தில் விவசாயிகள் சங்கு ஊதி விவசாயி ஒருவர் சாட்டையால் தன்னைத்தானே அடித்துக் கொண்டு சாமியிடம் குறி கேட்டு தமிழக அரசு நல்லதங்காள் அணைகட்ட நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.



பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நல்ல புத்தியை கொடுத்து விவசாயிகளின் பாதிப்பை உணர்த்தி விவசாயிகளின் தற்போதுள்ள மூன்றாம் தலை வாரிசுகளுக்காவது இழப்பீட்டுத் தொகை கிடைக்க வேண்டும் என சாமி ஆடினார்.



அப்போது அவர் மீது வந்த சாமி ஏப்பா கேளுப்பா இறக்கமற்ற அரசாங்கமா இருக்குது போராடி போராடி விவசாயிகள் நீங்களே கலைச்சிடுவீங்க வேண்டாம் அப்பா வேண்டாம் வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி நல்லதங்காள் ஓடை அணை விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகை இடுங்கள் என சாமி குறி சொன்னதாக விவசாயி சாட்டையால் அடித்துக் கொண்டு நூதன முறையில் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

காத்திருப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக வருகிற அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தை விவசாயிகள் முற்றுகையிட போவதாக அறிவிப்பு செய்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...