மின் கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு: பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிகரித்துள்ளதாக வணிகர் சங்க பேரவை தலைவர் பேட்டி

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் மின்சார கட்டணம் விவகாரத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும்,ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் புகார் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மின் கட்டண உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனைக்கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக பேரவையின் தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.



தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவானது திருப்பூர் புதூர் பிரிவு சாலையில் நடைபெற்றது. இதனை வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் வெள்ளையன் திறந்து வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசியாதவது,



நம் நாட்டில் உற்பத்தி செய்கின்ற சுய தொழிலை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் இதற்கு பாடுபடும்.

மின்சார கட்டணம் விலை உயர்த்தப்பட்டுள்ளது ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் வழி போக்கில் இது போன்ற செயல்களில் செயல்பட்டு வருகின்றனர். மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் கூட விலை உயர்வை உயர்த்தியுள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சார்பில் இதற்கான போராட்டங்கள் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...