தாராபுரத்தில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து - நள்ளிரவு வரை மின்சாரம் நிறுத்தம்!

தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்றிரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் நள்ளிரவு 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர மின் கம்பத்தில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்று இரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மின்சார ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மேலும் கம்பம் உடைந்து விழும் நிலை ஏற்பட்டது.



பெரும் மின்விபத்தை தவிர்க்க மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு 2 மணி வரை தாராபுரம் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சிறு குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...