தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 5 கோடி மதிப்பில் 167 வழக்குகளுக்கு தீர்வு!

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மீனோ தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில், 167 வழக்குகளுக்கு ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில், 167 வழக்குகளுக்கு ரூபாய் 5 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மீனோ தலைமையில் நடைபெற்றது.



இதில் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான தருமபிரபு, ஓய்வு நீதிபதி நாகராஜன், உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் 31 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 18 உரிமையியல் வழக்குகள், 96 குற்றவியல் சிறு வழக்குகள், மூன்று ஜீவனாம்ச வழக்கு, ஒரு குடும்ப வன்முறை வழக்கு, ஒரு காசோலை வழக்கு ஐந்து வங்கி வார கடன் வழக்கு 12 என மொத்தம் 167 வழக்குகளுக்கு ரூபாய் 5 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

இதில் 38,714 மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...