வரும் சட்டமன்றத் தேர்தலில் ச.ம.க தனித்து போட்டி..!! கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் அறிவிப்பு.!

2026 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாகவும், அதற்கான பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் அறிவித்துள்ளார்.



திருப்பூர்: சனாதனம் தொடர்பான சர்ச்சையில் உதயநிதிக்கு எதிராக பேசிய வடமாநில சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று சரத்குமார் கேட்டுகொண்டார். வடமாநிலங்களுக்கு உதயநிதி செல்லும்போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சரத்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,




2026 சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. அதற்கான பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி கொள்கைகள் மற்றும் தீர்மானங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.

சனாதனம் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் அந்த சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. கருத்து சுதந்திரம் என்பது பொதுவானது. மாநில அமைச்சர் பேசிய பேச்சுக்கு வட மாநில சாமியார் தெரிவித்த வன்முறை கருத்திற்கு அவர் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?. அவர் கைது செய்யப்பட வேண்டும், வட மாநிலங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் செல்லும்போது உண்டான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 1971 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வரான கருணாநிதி நடைமுறைப்படுத்த கடிதம் எழுதினார், அதற்கு காரணம் செலவினங்களை குறைக்க வேண்டும் வலியுறுத்தினார். தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ள சட்ட சிக்கல்களை தவிர்த்து அனைவரையும் கலந்து ஆலோசித்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி 16 ஆண்டுகள் நிறைவு செய்து 17 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கக்கூடிய நிலையில் இன்னும் தனித்துப் போட்டியிடாமல் தங்கள் பலத்தை எப்படி சோதிப்பது என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2026 சட்டமன்றத் தேர்தலை தனித்து களம்காண இருக்கிறோம். 2024 நாடாளுமன்றத் தேர்தல் என்ன மாதிரியான சீர்திருத்தங்களை கொண்டு வரப்போகும் என தெரியாத நிலையில் பண அரசியல் பலமாக இருக்கும் போது இயக்கத்தின் சகோதரர்களால் அதனை எதிர்கொள்ள முடியாது. அதனால் தான் தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி 2026 ஐ இலக்காக கொண்டு பயணிக்கிறோம்.

இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு உலக அளவில் இந்தியா என்ற பெயர் ஆழ்மனதில் பதிவான நிலையில் அதனை மாற்றுவது தேவையற்றது. நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக கேள்விக்கு நடிகர் சங்க நிர்வாகத்தில் தான் தலையிடுவதும் இல்லை. அதனை கண்டு கொள்வதில்லை. இப்போதும் நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும், கட்டிடம் வளர்ந்து வர வேண்டும் என்பதுதான் தனது விருப்பம் என சரத்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...