கோவையில் மது போதையில் கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மூதாட்டி கைது..!!

கோவையில் மது குடிக்கும் போது கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் கணவனை கட்டையால் அடித்தே கொன்ற மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கணவன் மனைவி இருவரும் அமர்ந்து மது குடிக்கும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமனைந்த மூதாட்டி கணவனை கட்டையால் அடித்து கொன்றார்.

கோவை ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோடு, தியாகி சிவராம் நகரை சேர்ந்தவர் லோகநாதன், 75. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் போலீசார் விசாரனை நடத்தினர். இதில்லோகநாதனை, அவரது மனைவி தெய்வானை மரக்கட்டையால் அடித்து, கொலை செய்தது தெரிந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட தெய்வானை, போலீசாரிடம் கூறியதாவது: எனது கணவர் லோகநாதனுக்கு வேலை இல்லை. நான் வீட்டு வேலைகளுக்கு சென்று வந்தேன். மகன் மணிகண்டன் செல்வபுரத்தில் குடியிருந்து வருகிறார். எங்களுக்கு மதுப்பழக்கம் உள்ளது.

நேற்று முன்தினம் இருவரும், வீட்டில் மது குடித்தோம். போதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவர், என்னை கைகளால் தாக்கினார். பதிலுக்கு, நான் வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து தாக்கினேன். அவர் பலத்த காயம் அடைந்து, உடனே இறந்து விட்டார் என போலீசாரிடம் தெய்வானை கூறினார். இதனையடுத்து தெய்வானையை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...