இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா மனு

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்வதை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் என ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவர்கள்.

இந்நிலையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி ராஷ்ட்ரிய இந்து மகாசபா சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

அதன் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை திட்டமிட்டே சில இஸ்லாமிய அமைப்புகள் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்ய கோரி வருவதாகவும், இதனை தமிழக அரசு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஆவணம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...