17 ஆண்டுகளாக மின் இணைப்பில்லா கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்குக - பாமக வலியுறுத்தல்!

திருப்பூரில் 17 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாத சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த சின்னியம்பாளையம்புதூர் கிராமத்திற்கு மின் இணைப்பு வழங்க கோரி பாமக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் பூமலூர் கிராமத்திற்கு உட்பட்ட சின்னியம்பாளையம் புதூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு வழங்கப்படாததன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மிகப்பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

வீட்டு வரி உள்ளிட்டவை முறையாக செலுத்தி வந்தும் கூட, இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டபோது வட்டாட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.



எனவே அப்பகுதி பொது மக்களுக்கு எந்தவொரு நிபந்தனையும் இன்றி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் பாமக ஈடுபடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...