கோயம்புத்தூரில் ஜிப் லைன் மற்றும் ஜிப் சைக்கிள் சோதனை ஓட்டம்..!! மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஜிப்‌ லைன்‌ மற்றும்‌ ஜிப்‌ சைக்கிள்‌ (ZIP LINE and ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஒட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆய்வு செய்தார்.


கோவை: வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி உக்கடம்‌ பெரியகுளத்தில்‌ ரூ.62.17 கோடி மதிப்பீட்டில்‌ சீர்மிகு நகரத்‌ திட்டப்பணிகளின்‌ ஒருபகுதியாக பொழுதுபோக்கு மற்றும்‌ பாதுகாப்பு அம்சங்களுடன்‌ கூடிய குளத்தின்‌ மேற்பரப்பில்‌ சுமார்‌ 200 மீட்டர்‌ தொலைவிற்கு ஒரே நேரத்தில்‌ 3 நபர்கள்‌ ஜிப்‌ லைனிலும்‌, 3 நபர்கள்‌ ஜிப்‌ சைக்கிளிலும்‌ பயணம்‌ செய்யும்‌ வகையில்‌ (ZIP LINE & ZIP CYCLE) அமைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம்‌ நடைபெறுவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, பணிகளை தரமானதாகவும்‌, பாதுகாப்பானதாகவும்‌ அமைய வேண்டுமென பொறியாளா்களுக்கு அறிவுறுத்தினார்‌.



முன்னதாக, உக்கடம்‌ வாலாங்குளத்தில்‌ சீர்மிகுநகர திட்டத்தின்கீழ்‌ ரூ.67.86 கோடி மதிப்பீட்டில்‌ புனரமைப்பு பணிகளின்‌ ஒருபகுதியாக வாலாங்குளத்தின்‌ பெயரைக்‌ குறிக்கும்‌ வகையில்‌ குளத்தின்‌ நுழைவுவாயில்‌ பகுதியில்‌ “V” வடிவில்‌ தோரணம்‌ அமைக்கும்‌ பணி மற்றும்‌ உணவு கூடம்‌ கட்டுமான பணிகளை நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும்‌, தரமாகவும்‌ செய்து முடித்திட சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வுகளின் போது உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, சரவணக்குமார்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...