அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெற்கு மாவட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் கடந்தஇரண்டாம் தேதி சனாதன ஒழிப்பு மாநாட்டை தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில் திமுக இளைஞர் அணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதில் சனாதன ஒழிப்பு குறித்து உதயநிதி பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. எனவே உதயநிதி பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் அந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



பேரூர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜக கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...