மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்!

மகளிர் உரிமை தொகை வழங்குவதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து கோவையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


கோவை: கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 15ஆம் தேதியன்று தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிகழ்வை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் நடைபெறவுள்ள கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.



இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது, இத்திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முதல் கட்டமுகாம், இரண்டாம் கட்டமுகாம் மற்றும் சிறப்பு முகாம்கள் ஆகியவற்றின் மூலம் 7,41,799 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 2,81,942 விண்ணப்பங்கள் களஆய்வு மேற்கொள்ள வரப்பெற்றது.

தற்போது வரை வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகவளர்ச்சி, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை, உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் களஆய்வு செய்யப்பட்டுள்ளது.

15ம் தேதி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கார்டுகளை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பு பணிகள், வாகன நிறுத்தும் இடங்கள், வாகன போக்குவரத்து போன்ற பணிகளை காவல் துறையினரால் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் அடங்கிய மருத்துவ குழு அவசர ஊர்தி வசதியுடன் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தேவையான குடிநீர், மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...