பேருந்து விபத்தில் கால் இழந்த மாணவி - வழக்கை விரைந்து முடிக்க கோரி ஆட்சியரிடம் மனு!

திருப்பூரில் பேருந்து விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவி பிரியா, அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கை விரைந்து முடித்து இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.



திருப்பூர்: பேருந்து விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவி பிரியா வழக்கை விரைந்து முடித்து இழப்பீட்டு தொகை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா ‌, தாய் இல்லாத நிலையில் தனது தந்தை மற்றும் அக்காவுடன் விரபாண்டி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

அப்போது பள்ளி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அரசு பேருந்தில் வந்தவர் புஷ்பா பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கி சாலையில் கடக்கும் போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் பிரியாவின் இடது கால் முழுவதும் சிதலமடைந்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவிற்கு தமிழக அரசு சார்பில் மருத்துவ செலவு ஏற்கப்பட்டது. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீடு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாணவி பிரியா கூறியதாவது,

அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்கு மேல் தளத்தில் வீடு வழங்கப்பட்டு உள்ளதால், சிகிச்சைக்கு செல்வதற்கும் மற்றும் அவசர தேவைக்கு சொல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊனமுற்றோருக்கான கீழ்தளத்தில் வீடு வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து முடித்து தனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் தற்போது மீண்டும் வலி ஏற்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சை அளிப்பதற்க்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ப்ரியா தனது சகோதரி உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...