கோவையில் தூய்மைபணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் - மேயர், மாநகர ஆணையர் தொடங்கி வைப்பு

கோயமுத்தூர் மாநகராட்சியில் ஆயிரம் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாமை மேயர் கல்பனாவும், மாநகராட்சி ஆணையர் பிரதாப்பும் கூட்டாக தொடங்கி வைத்தனர்.


கோவை: மருத்துவ முகாமில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு ஸ்கேன்‌, எக்ஸ்‌-ரே, ECG இருதய பரிசோதனை, இரத்த யூரியா, வெள்ளை அணுக்கள்‌ சர்க்கரை அளவு, உப்பு சத்து அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும்‌ பல்வேறு நோய்களுக்கான உடல்‌ பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌, பிளமேடு, பி.எஸ்‌.ஜி மருத்துவமனையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ பி.எஸ்‌.ஜி மருத்துவமனை இணைந்து மாநகராட்சியில்‌ வடக்கு மற்றும்‌ மேற்கு மண்டலங்களில்‌ பணியாற்றும்‌ 1000 தூய்மைப்பணியாளா்களுக்கான சிறப்பு முழு உடல்‌ பரிசோதனை முகாமினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ இ.ஆ.ப., ஆகியோர்‌ குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்கள்‌.!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, கிழக்கு மண்டலம்‌, பீளமேடு பி.எஸ்‌.ஜி மருத்துவமனையில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ பி.எஸ்‌.ஜி மருத்துவமனை இணைந்து மாநகராட்சியில்‌ பணியாற்றும்‌ 1000 தூய்மைப்பணியாளர்களுக்கான சிறப்பு முழு உடல்‌ பரிசோதனை முகாமினை மாண்புமிகு மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ இன்று (12.09.2023) குத்துவிளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தனர்.

தமிழக முதலமைச்சர்‌ ஆரோக்கியமான தமிழக உருவாக்கிடும்‌ நோக்கில்‌ ஆரோக்கியமாக பொதுமக்கள்‌ இருக்க வேண்டும்‌ என்ற நோக்கில்‌, சிறப்பு மருத்துவ முகாம்‌ நடத்திட வேண்டும்‌ என உத்தரவிட்டுள்ளார்கள்‌.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பல்வேறு பணியாளர்களுக்கு மண்டல வாரியதாக மருத்துவ முகாம்கள்‌ நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ பணியாற்றும்‌ தூய்மைப்பணியாளாகளுக்கு கோயம்புத்தூர்‌ மாநகராட்சியுடன்‌ பி.எஸ்‌.ஜி மருத்துவமனை இணைந்து இந்த முகாம்‌ நடத்தப்பட்டு வருகிறது. இதில்‌ வடக்கு மற்றும்‌ மேற்கு, இதர மண்டலங்களில்‌ உள்ள மொத்தம்‌ 1000 தூய்மைப்பணியாளர்கள்‌ பயனடைவார்கள்‌.

ஆகமொத்தமாக ஐந்து மண்டலத்தில்‌ பணியாற்றும்‌ 7300 தூய்மைப்பணியாளர்களுக்கு முழு உடல்‌ பரிசோதனை செய்ய இந்த மருத்துவ முகாம்களானது நடத்தப்பட்டு வருகிறது. கோயம்புத்தார்‌ மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள்‌ பல்வேறு நிலைகளில்‌ தூய்மைப்பணிகளில்‌ பணியாற்றி வருகின்றார்கள்‌. எழில்மிகு கோவைக்கு இவர்களின்‌ பணியானது முக்கிய பங்கு வகிக்கிறது.

அதனால்‌ அவர்களின்‌ உடல்‌ நலத்தை பாதுகாப்பது நமது முக்கிய கடமை. எனவே, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ மருத்துவமனை சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்‌ நடத்தப்பட்டு, சுமார்‌ 1000 தூய்மைப்பணியாளா்களுக்கு சிறப்பு கவனம்‌ கொண்டு மருத்துவ முழு உடல்‌ பரிசோதனையானது நடத்தப்பட்டு வருகிறது. மேலும்‌, அதனைத்தொடர்ந்து, மாநகராட்சி பணியாளர்கள்‌, மாமன்ற உறுப்பினர்களுக்கும்‌ இந்த விரிவான முழு உடல்‌ பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில்‌ தூய்மைப்பணியாளர்களுக்கு ஸ்கேன்‌, எக்ஸ்‌-ரே, ECG இருதய பரிசோதனை, இரத்த யூரியா, வெள்ளை அணுக்கள்‌ சர்க்கரை அளவு, உப்பு சத்து அளவு, சிறுநீர் பரிசோதனை மற்றும்‌ பல்வேறு நோய்களுக்கான உடல்‌ பரிசோதனை செய்யப்படும்‌. இந்த சிறப்பு மருத்துவ முகாமானது நோயின்‌ ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக அமையும்‌. இந்த மருத்துவ முகாமினை அனைவரும்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்தி, ஆரோக்கியமாக வாழ வேண்டும்‌.

இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, பொது சுகாதார குழு தலைவா்‌ பெ.மாரிசெல்வன்‌, பி.எஸ்‌.ஜி. மருத்துவக்கல்லாரி இயக்குநர் மரு.புவனேஸ்வரன்‌, மரு.சுப்பராவ்‌, பொது மேலாளர் லோகநாதன்‌, நகர்நல அலுவலா்‌ டாக்டா்‌.ஆர்‌.தாமோதரன்‌, உதவி நகர்நல அலுவலர்‌ மரு.வசந்த்திவாகர், உதவி ஆணையார்கள்‌ நூார்அகமது, செந்தில்குமார்‌, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன்‌, சுகாதார ஆய்வாளர்கள்‌ அரவிந்த்‌, ஜெரால்டு சத்யபுனிதன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌, பி.எஸ்‌.ஜி மருத்துவமனை மருத்துவர்கள்‌ மற்றும்‌ தூய்மைப்பணியாளார்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...