எதிர்கால விதை தேவைக்கான உத்திகள் கடைக்கோடி விவசாயி வரை சென்றடைய வேண்டும்- முனைவர் மு.பாஸ்கரன்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை மையத்தில் மூன்றாவது வருடாந்திர கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்கலைக்கழக நிர்வாகிகள், விதை சான்றளிப்புத் துறை இயக்குனர்கள், 50-க்கும் மேற்பட்ட வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், தனியார் விதை நிறுவன அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



தமிழ்நாடு விதை உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கி.காளிதாஸ், விதை சான்றளிப்புத் துறை இணை வேளாண் இயக்குனர் ஆர்.பாண்டியராஜ் மற்றும் வேளாண் பல்கலைக்கழக பயிர் இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குனர் முனைவர். கே.கணேசமூர்த்தி ஆகியோர் தரமான விதை உற்பத்தி, அதில் உள்ள முறன்பாடுகள் பற்றிய முக்கியத்துவத்தை விளக்கினர். 



வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர் முனைவர். எம்.மகேஷ்வரன், விதை தூய்மை, உயிர் தொழில்நுட்ப முறையில் விதையின் உண்மை தன்மை கண்டறிதல் மற்றும் வீரியமான விதை உற்பத்தி முறைகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பரிந்துரைத்தார்.



தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். மு.பாஸ்கரன், தனது விழா உரையில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப விதைகளின் தன்மையில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தி வேளாண் உற்பத்திக்கு வகை செய்யும் முறைகளை முன் வைத்தார்.

எதிர்கால விதை தேவைக்கு ஏற்ற உத்திகளையும், பல்கலைகழகங்கள், விதை உற்பத்தியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பினையும் பல்கலைக் கழக ஆராய்ச்சியினை கடைமட்ட பயனாளிகளான விவசாயிகள் வரை எடுத்து செல்வது பற்றியும், இதில் உள்ள குறைபாடுகளை தவிர்ப்பது பற்றியும் சிறப்பாக விவரித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி தனது சிறப்புரையில் எண்ணெய்வித்து பயிர்களின் உற்பத்தி பற்றியும் சிறப்பான முறையில் இடைநில்லா விதை வழங்குவது பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார்.

மேற்கத்திய நாடுகளின் ஆராய்ச்சிகளையும் உற்பத்தி முறைகளையும் நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் நிலவும் தன்மையை உணர்ந்து இந்தியாவில் சிறப்பான விதை உற்பத்தி திட்டம் வகுக்கப்படுவதையும் எடுத்துரைத்தார்.

விவசாய பெருமக்களுக்காகவே நாம், அவர்களின் வாழ்வாதரம் உயரும்போதே நாடும் வளம்பெறும் என எடுத்துரைத்தார். விவசாய ஆராய்ச்சியால் காணப்படும் குறைபாடுகளை நீக்கி அவற்றினை நிவர்த்தி செய்து முன்னேற்றப்பாதையில் வேளாண் உற்பத்தியினை கொண்டு செல்வது பற்றியும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக கருத்தரங்க கையேட்டினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி வெளியிட தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். மு.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.



முன்னதாக வேளாண் பல்கலைக்கழக தனி அலுவலர் (விதைகள்) முனைவர் பொ.செல்வராஜு வரவேற்புரையாற்றினார். இறுதியில் வேளாண் பல்கலைக்கழக விதை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப துறை தலைவர் முனைவர். ஆர். உமாராணி நன்றியுரையாற்றினார்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...