துடியலூரில் எமன் வேடமணிந்து வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே எமன் வேடமணிந்த கல்லூரி மாணவர் ஒருவர் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



கோவை: சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வில் ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு கார்டுகளை மாணவர்கள் கொடுத்தனர்.



கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே துடியலூர் போக்குவரத்து துறை, அலார்ட் தொண்டு நிறுவனம் மற்றும் போர்ட் மோட்டார் ஐடி கம்பெனி ஆகியோர் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.



இதில் சாலையில் வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து இருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள் அட்டை மற்றும் சாக்லெட்கள் வழங்கப்பட்டன.



ஹெல்மெட் அணியாமல் வந்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு எவ்வாறு பின்பற்ற வேண்டும் மற்றும் முதலுதவி குறித்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டு அதற்கான விழிப்புணர்வு கார்டுகளையும் தந்தனர்.



இதில் கலந்துக்கொண்ட கல்லூரி மாணவர் ஒருவர் எமன் போல வேடமிட்டு கையில் பாசக்கயிறுடன் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு உயிர் இழக்க வேண்டும் என்னுடன் மேலே வந்துவிட வேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாணவ, மாணவிகள் கையில் பதகைகளுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...