விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தாராபுரத்தில் எல்.ஐ.சியை முற்றுகையிட்ட சிபிஐ கட்சியினர் கைது!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து தாராபுரம் எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 800 க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாராபுரம் எல்.ஐ.சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எல். ஐ .சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் சி.பி.எம் மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன் தலைமையில் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அமராவதி ரவுண்டானாவரை பேரணியாக வந்துஎல்.ஐ.சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதில் திருப்பூர் புறநகர் மாவட்ட நிர்வாக குழு தலைவர் பி. ரகுபதி, புறநகர் மாவட்ட செயலாளர் கே.எம்.இஷாக், தாலுகா செயலாளர் லட்சுமணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



சி.பி.ஐ கொடிகளுடன் 800-க்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்கள் பேரணியாக வந்து மத்திய அரசின் முரண்பாடான கொள்கைகளான விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பறிப்பு.



பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு பொருள்களின் விலை உயர்வு வேலையில்லா திண்டாட்டம் திருப்பூர் பனியன் உட்பட சிறு குறு தொழில்கள் முடக்கம் தொழிலாளர் விரோதம் விவசாயிகள் விரோத சட்டங்கள் நாட்டின் அரசுத்துறைகளில் ஊழல் பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை சாதி, மத, மோதல்கள் சிறுபான்மை மற்றும் பழங்குடி மக்களை எதிராக செயல்படுவது.

நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை மத்திய அரசு செய்து வருவதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...