பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்!

உதவி சமையலர்களுக்கு மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள பதவி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட உதவி கணக்கு சத்துணவு அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள உதவியாளர் சமையலர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிதி நிலைகளை உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட பொருளாளர் சுதா மற்றும் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் சுசிலா ஆகிய இருவரையும் உடனடியாக அதே இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஆனைமலை ஒன்றியத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், சத்துணவு மையத்தை ஆய்வு செய்யும் பொழுது உதவி கணக்கு அலுவலர் லட்சக் கணக்கான ரூபாயை அபராத தொகையாக விதிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.

மேலும் விதிக்கப்பட்ட அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...