மேயர் குடும்பத்தினர் மீது புகார் அளித்த பெண்ணின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

கோவையில் மேயர் கல்பனா ஆனந்தகுமாரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்திருந்த சரண்யா என்ற பெண்ணின் கார் இன்று பிற்பகல் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது புகார் அளித்த பெண்ணின் கார் தீப்பிடித்து ஏரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தன்னை எதிர் வீட்டில் இருந்து காலி செய்ய வைக்க மேயர் குடும்பத்தினர் தொல்லை கொடுப்பதாகவும், குப்பைகளையும், அழுகிய பொருட்களையும் வீட்டின் அருகில் போடுவதாகவும், சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும், வீட்டின் முன்பு மந்திரித்த எலுமிச்சை பழங்களை வைப்பதாகவும் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் சரண்யாவின் கார் இன்று பிற்பகல் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது.



காரின் ஒரு பகுதி தீயில் கருகி சேதம் அடைந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையில் சரண்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை மாநகர போலீசாரும், தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து சரண்யாவிடம் புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார் கார் பிடித்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரின் மீது கவர் போடப்பட்டிருந்த நிலையில், கவரில் பற்றிய தீ காரின் ஒரு பகுதியை சேதமாக்கி இருப்பதும் தெரிய வந்தது.

இது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட செயலா அல்லது ஏதேச்சையாக நடந்ததா என்பது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...